Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராஜீவ் கொலை குற்றவாளிகள்: ராகுலின் கருத்தில் சுப்ரமணிய சுவாமிக்கு சந்தேகம்!

In இந்தியா
Updated: 11:37 GMT, Mar 12, 2018 | Published: 10:57 GMT, Mar 12, 2018 |
0 Comments
1223
This post was written by : Kemasiya

ராஜீவ்காந்தி கொலையாளிகள் மீது ராகுல்காந்தி காட்டும் கருணை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென, பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைத்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

“ராஜீவ் காந்தியை ஏன் கொன்றோம் என்று முன்னர் விடுதலைப் புலிகள் கூறிய காரணத்தில், தங்களுக்கு எதிராக போரிட இந்திய ராணுவத்தை அனுப்பியதால் கொன்றோம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால்,  விடுதலை புலிகளுடனான போரில் தமது ராணுவத்திற்கு துணையாக இந்தியா ராணுவத்தை தந்துதவுமாறு இலங்கை அரசு  கேட்டு கொண்டதற்கு அமையவே நமது பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்தான் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு ராஜீவ் காந்தி அனுப்பி வைத்தார்.

இந்நிலையில் ராஜீவ் கொலையாளிகளுக்கு காட்டப்படும் கருணை அவரது படுகொலையில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கொலையாளிகளை மன்னித்து விட்டதாக கூறும் ராகுல் காந்திக்கு தேசபக்தி குறைவு என்பதையும் காட்டுகிறது.

ராஜீவ் காந்தி ஒரு உண்மையான தேசியவாதி. அவரது வாழ்நாளில் முக்கியமான காலகட்டத்தில் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தவர்களுக்கு கருணை காட்டவோ மன்னிக்கவோ கூடாது.

வெளிநாட்டினருடன் சேர்ந்து நமது முன்னாள் பிரதமரை கொன்றவர்களுக்கு நாம் ஏன் கருணை காட்ட வேண்டும்? என்பது எனக்கு புரியவில்லை.

இந்த தண்டனை நமது நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை. ராகுலின் தந்தையை கொன்றவர்களுக்கானது அல்ல என்பதை ராகுல் காந்தி புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்விவகாரத்தில் விடுதலைப் புலிகளுடன் ஏதோ ‘புரிதல்’ உள்ளதாக தோன்றுவதால் இதில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

தண்டனை அனுபவித்து வருபவர்களின் உறவினர்கள் மட்டுமே அவர்களை சிறையில் சந்திக்க முடியும். அவர்களது உறவினராக இல்லாத பிரியங்கா காந்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகளை ஏன் சென்று சந்திக்க வேண்டும்?

மேலும் நளினியின் மகள் இங்கிலாந்தில் படிக்க தேவையானவற்றை சோனியா காந்தி கவனித்து கொண்டார். இந்திரா காந்தி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்பதற்காக நளினிக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏன் இவ்வளவு அனுதாபம் காட்டுகிறார்கள்? என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் ஏதோ தவறு இருக்கிறது என்று நான் சந்தேகப்படுகிறேன்” என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg