Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது: அண்ட்ரியா!

In சினிமா
Updated: 10:47 GMT, Mar 12, 2018 | Published: 10:47 GMT, Mar 12, 2018 |
0 Comments
1073
This post was written by : Vithushagan

சினிமாவில் அதிகமாக ஆணாதிக்கம் காணப்படுகிறது என்று நடிகை அண்ட்ரியா விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும் இன்னும் முன்னணி நடிகை பட்டியிலில் இடம் பிடிக்காதவர் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் இவர் ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் “படத்தில் நடித்த எனக்கு பாராட்டும் புகழும் கிடைத்தது. அந்தப் படம் பற்றி மக்கள் அதிகம் பேசினார்கள். அதன் பின்னர் எனக்கு ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. நடிகை நயன்தாராவே முதலில் விஜய், ரஜினி, அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த பிறகு தான் ‘நயன்தாரா’ என்ற  நச்சத்திரம் ஆக முடிந்தது.

அது நடக்காவிட்டால், அந்த ஹீரோயின் பற்றி வெளியில் தெரிய வாய்ப்பிருந்திருக்காது. ஒரு நடிகையின் திறமையை அவர் யாருடன் நடிக்கிறார் என்பதை பொறுத்து யாரும் நிர்ணயிக்கக் கூடாது. தமிழ் சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம் இருப்பதால் நடிகைகளுக்கு எப்போதுமே சினிமாவில் குறைந்தப்பட்ட அளவிலான முக்கியத்துவம் மட்டுமே தரப்படுகிறது.

நான் தற்போது நடித்துக்கொண்டு இருக்கும் அனைத்து படங்களிலுமே எனக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. படப்பிடிப்புகளில் தினமும் புதிய விஷயங்களை கற்கிறேன். எனக்கும் இங்கிலாந்தை சேர்ந்த பெனடிக் டைலருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

மும்பையில் புதிதாக வீடு வாங்கி குடியேறி இருக்கிறோம். லண்டனிலும் வீடு இருக்கிறது. மும்பை வீட்டில் அழகாக உள் அலங்காரம் செய்து இருக்கிறேன். நமது கலாசார பண்பாடுகள் எனக்கு பிடிக்கும். அவற்றை பின்பற்றுகிறேன்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg