Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலா-தினகரன் சந்திப்பு: கட்சி தொடர்பில் ஆலோசனை

In இந்தியா
Updated: 11:11 GMT, Mar 12, 2018 | Published: 11:11 GMT, Mar 12, 2018 |
0 Comments
1133
This post was written by : Kemasiya

புதிய கட்சி மற்றும் கொடி தொடர்பில் பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதற்காக நேற்று இரவு பெங்களூர் சென்று ஒரு விடுதியில் தங்கிய தினகரன் இன்று சசிகலாவுடன்  சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

தினகரன் பரிந்துரைத்த மூன்று பெயர்களில் ஒரு கட்சி பெயரை அங்கீகரிக்கும்படியும், அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையகம் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் புதிய கட்சியை தினகரன் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி கட்சி பெயர் மற்றும் கொடியை வரும் 15ஆம் திகதி காலை 9மணிக்கு, மதுரை மாவட்டம் வேலூர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கவுள்ளார்.

எனவே இதற்கு முன்னதாக இது தொடர்பில் இன்று சசிகலாவை சந்தித்து தினகரன் ஆலோசனை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg