Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அகதிகளின் நிலையை சிற்பமாக வடித்த சீனக்கலைஞன்

In
Updated: 11:01 GMT, Mar 12, 2018 | Published: 11:01 GMT, Mar 12, 2018 |
0 Comments
1190
This post was written by : Varothayan

உலகெங்கிலும் உள்ள அகதிகளின் நிலையைச் சிறப்பித்துக் காட்டும் வகையில், சீனக்கலைஞர் அய் வெய்வெய்யினால் (Ai Weiwei), கலை வடிவம் ஒன்று ஆக்கப்பட்டுள்ளது.

சுமார் 60 மீட்டர் நீளமான இக்கலைப்படைப்பானது, ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொள்ளும் அகதிகளைச் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.

பெரியவர்கள், சிறியவர்கள் என 300 இற்கும் அதிகமான அகதிகள் பாதுகாப்புக்கள் அற்ற நிலையில், ரப்பர் படகில் அமர்ந்திருப்பது போல இந்த கலை வடிவம் ஆக்கப்பட்டுள்ளது.

இன்று சிட்னியில் குறித்த வடிவம் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பலரையும் அது கவர்ந்துள்ளது எனக்குறிப்பிடலாம்.

‘Law of the Journey’ என்ற கருப்பொருளின் கீழ், இந்த வடிவமானது பராகுவே தேசிய கலாபவனத்திற்காக வடிவமைக்கப்பட்டது. இது முன்னாள் கப்பல் கட்டுமானத்தளமான கொக்காடோ தீவில் வைத்து உருவாக்கப்பட்டது.

ஆபத்தான கடற்பயணங்களை மேற்கொண்டு மத்தியதரைக்கடல் ஊடாக அகதிகள் பயணிக்க பயன்படுத்தும், ரப்பர் படகின் மாதிரியாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த தளம், அகதிகளுக்கு எதிரான அவுஸ்திரேலியாவின் சாதனைகளைக் காட்டுவதற்கு பொருத்தமானது என குறித்த கலைப்படைப்பை வடிவமைத்த கலைஞர் அய் குறிப்பிடுகிறார்.

சீனாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவரான அய் வெய்வெய், தனது ‘மனிதப் பாய்ச்சல்’ எனும் ஆவணத்தொகுப்பை பிரபல்யப்படுத்தும் நோக்கில், தற்போது அவுஸ்ரேலியாவில் தங்கியுள்ளார்.

குறித்த ஆவணத்தொகுப்பு எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி, அவுஸ்ரேலியாவின் ஒபேரா ஹவுஸில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg