Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வரலாற்று புகழ்பெற்ற கோட்டைக்கு விஜயம் செய்தார் ஹிலாரி கிளின்டன்

In இந்தியா
Updated: 11:24 GMT, Mar 12, 2018 | Published: 11:24 GMT, Mar 12, 2018 |
0 Comments
1129
This post was written by : Kemasiya

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளின்டன் ஜஹல் மஹால் எனப்படும் கோட்டைக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) காலை டெல்லியில் இருந்து வாரனாசிக்கு விமானம் மூலம் சென்றிருந்த அவர், இந்தூர் அருகேயுள்ள குறித்த வரலாற்று புகழ் பெற்ற கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார்.

மேலும் இவர் பல சுற்றுலாத் தளங்களுக்கு செல்லவுள்ளதோடு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றையும் பார்வையிடவுள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் டெல்லியில் இருந்து இந்தூர் செல்வதற்கு முன்னர், புதுடெல்லியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஹிலாரி உரையாற்றியிருந்தார்.

இதன்போது அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் கொள்கைகள் என்பன குறித்து அவர் பல விடயங்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg