Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

திருகோணமலையில் வாள் வெட்டு: மூவர் படுகாயம்

In இலங்கை
Updated: 13:14 GMT, Mar 12, 2018 | Published: 13:14 GMT, Mar 12, 2018 |
0 Comments
1140
This post was written by : poovannan

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காந்திநகர் கிராமத்தில் இடம்பெற்ற அசிற் வீச்சு மற்றும் வாள் வெட்டுச் சம்பவங்களில் மூவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஒருவருக்கு முதலில் அசிற் வீசப்பட்டுள்ளது. இதனை அவதானித்த அவரது சகோதரர்கள் அசிற் வீசியவரை பிடிப்பதற்காக துரத்திச் சென்றுள்ளனர். இதன்போது, அசிற் வீசியவர்களின் நண்பர்கள் எனக் கருதப்படும் சிலர் எதிர்த்திசையில் இருந்து வந்து சரமாரியாக வாளால் வெட்டியுள்ளனர்.

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வந்த வன்முறைகள் தற்போது திருகோணமலைக்கும் விரிவடைந்திருப்பது குறித்து பொது மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg