Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்கக் கட்டடம் திறப்பு

In இலங்கை
Updated: 15:26 GMT, Mar 12, 2018 | Published: 15:26 GMT, Mar 12, 2018 |
0 Comments
1123
This post was written by : poovannan

கிளிநொச்சி – உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் மூத்தோர் சங்க கட்டடத்தினை வடக்கு மாகாண முதலமைச்சர் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வு மூத்தோர் சங்கத் தலைவர் ரகுபதி தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதலமைச்சர் கலந்து கொண்டதுடன், வைத்தியர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், மூத்தோர் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் முதலமைச்சர் உரையாற்றுகையில், “கடந்த காலங்களை போன்று கூடி வாழ்தல் இப்போது இல்லாது போயுள்ளது. அம்மா, அப்பா, பாட்டன், பூட்டி, பேரன், பேத்தி எனக் கூடி வாழ்ந்த சமூகம் இப்போது பிரிந்தே வாழ விரும்புகின்றது.

இதனால் எமது பாரம்பரிய உணவுகளை பெரும்பாலும் தெருக்கடைகளிலேயே பெற்றுக்கொள்கின்றோம். பாரம்பரிய உணவுகளை எம்மத்தியில் மீள கொண்டு வர வேண்டும்.

சனசமூக நிலையங்களை மீள ஆரம்பிப்பது தொடர்பான கோரிக்கைக்கு அமைய குறித்த சன சமூக நிலையங்களை மீள கட்டியெழுப்பும் முயற்சிகள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg