Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.சுரேஷின் அடுத்த படத்துக்கான தகவல் வெளியானது!

In சினிமா
Updated: 15:43 GMT, Mar 12, 2018 | Published: 15:43 GMT, Mar 12, 2018 |
0 Comments
1072
This post was written by : Vithushagan
தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், தற்போது ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ போன்ற படங்களில் நடித்து வரும் நிலையில், அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. வில்லனாக அசத்திய ஆர்.கே.சுரேஷ் தற்போது ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இப்படத்தை அடுத்து ‘டைசன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ‘அட்டு’ பட இயக்குனர் ரத்தன் லிங்கா இயக்கவுள்ளார். இதுவரை ஏற்றிராத மாறுபட்ட கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கின்றார்.
மேலும் இப்படத்தில் ஆர்.கே.சுரேஷுடன் ‘அஃகு’ படத்தின் நாயகன் அஜய் இரண்டு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.
முன்னணி தொழில் நுட்பக்கலைஞர்கள் மற்றும் முன்னணி நடிகர்கள், நடிகைகள் இதில் நடிக்கின்றார்கள். பிரம்மாண்ட பொருட்செலவில் ‘ஸ்ரூயோ 9’ என்ற நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது.
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg