Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.நா.வின் தடையை மீறிய சிங்கப்பூர் நிறுவனங்கள்!

In உலகம்
Updated: 06:00 GMT, Mar 13, 2018 | Published: 03:25 GMT, Mar 13, 2018 |
0 Comments
1111
This post was written by : Elakkiya

வடகொரியா மீதான பொருளாதார தடையையும் மீறி சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆடம்பர பொருட்களை வழங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சாட்டியுள்ளது.

ஐ.நா.வின் அறிக்கை ஒன்றின் மூலம் மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த அறிக்கையின் பிரகாரம் சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் இரண்டு நிறுவனங்களே இவ்வாறு பொருட்களை விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த நிறுவனங்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் வைன் (wines) மற்றும் ஸ்பிரிட்களை (spirits) வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகொரியாவுக்கு ஆடம்பர பொருட்களை விநியோகித்தலானது சட்டவிரோதமானது என கடந்த 2006 ஆம் ஆண்டு ஐ.நா. அறிவித்திருந்தது. அதுபோன்றே இத்தகைய ஆடம்பர பொருட்களை வடகொரியாவுக்கு விற்பனை செய்வதை சிங்கப்பூரும் தடை செய்திருந்தது.

எனினும் சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் OCN மற்றும் T Specialist ஆகிய இரண்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக ஆடம்பர பொருட்களை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் குறித்த இரு நிறுவனங்களும் தாம் எவ்வித தவறையும் செய்யவில்லை என மறுத்துள்ளன.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிங்கப்பூர் அரசாங்கம், நம்பகமான தகவல் குறித்து விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளது.

தற்போது கசிந்துள்ள ஐ.நா. அறிக்கையானது ஐ.நா. பாதுகாப்புச் சபையில் கையளிக்கப்பட்டு இவ்வாரமளவில் முழுமையாக வெளியாகுமென கூறப்படுகின்றது.

வடகொரியாவின் அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளால் வடகொரியாவுக்கு எதிரான உலகளாவிய தடைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் கடுமையாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg