Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸ் அதிபரும் இந்தியப் பிரதமரும் அலங்கார படகில் பயணம்!

In இந்தியா
Updated: 03:19 GMT, Mar 13, 2018 | Published: 03:19 GMT, Mar 13, 2018 |
0 Comments
1218
This post was written by : Kemasiya

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து பழமையான நதியொன்றில் படகு சவாரியை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

வாரணாசியில் அமைந்துள்ள குறித்த நதிக்கான படகுச்சவாரியை நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பித்து வைத்துள்ளனர்.

மஞ்சல் நிற மலர் மாலைகளினால் அலங்கரிக்கப்பட்ட படகில், மக்களின் அமோக வரவேற்பிற்கு மத்தியில் இருவரும் குறித்த படகில் பயணித்து இப்படகுச்சவாரியை ஆரம்பித்து வைத்தனர்.

இந்நதியோரத்திற்கு காரில் வந்திறங்கிய பிரான்ஸ் ஜனாதிபதியையும் இந்தியப் பிரதமரையும், வட இந்திய மக்கள் தமது சம்பிரதாய நடனம் மூலம் மலர் தூவி  வரவேற்பளித்திருந்தனர்.

இந்தியாவிற்கு நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இந்திய பிரதமர் மோடியுடன் இணைந்து, நேற்று உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய சூரிய சக்தி பூங்காவை திறந்து வைத்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg