Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குரங்கணி தீ விபத்தை தொடர்ந்து கேரளாவில் மலையேறத் தடை!

In இந்தியா
Updated: 03:46 GMT, Mar 13, 2018 | Published: 03:46 GMT, Mar 13, 2018 |
0 Comments
1164
This post was written by : Kemasiya

தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தினை தொடர்ந்து கேரளாவில் மலையேறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கேரளா முழுவதும் சுற்றுலாப் பயணிகள் உட்பட அனைவரும் மலையேறுவதற்கு தற்காலிக தடை விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தோடு மாநிலத்தின் வனப்பகுதிகளில் காட்டுத் தீ ஏற்படாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், குறித்த வேலைகளை ஆணையகம் உன்னிப்பாக கவனிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க தமிழக அதிகாரிகளுக்கு இடுக்கி மாவட்ட ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.

இதேவேளை குறித்த தீ விபத்தின் மீட்புப் பணிகளின் போது, கேரளா மாவட்ட பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டனர்” என பினராயி விஜயன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg