Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய உளவாளி மயக்கம்: ரஷ்யாவே காரணம் என்கிறார் தெரேசா மே!

In
Updated: 04:32 GMT, Mar 13, 2018 | Published: 04:32 GMT, Mar 13, 2018 |
0 Comments
1207
This post was written by : Elakkiya

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவருடைய மகள், ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய இரசாயனத்தால் தாக்கப்பட்டே மயக்கமடைந்தனர் என பிரித்தானிய பிரதமர் தெரசோ மே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (திங்கட்கிழமை) உரையாற்றும் போதே தெரேசா மே இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இதற்கான பொறுப்பை ரஷ்யா ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இது எமது நாட்டிற்கு எதிரான ரஷ்ய அரசின் நேரடி தாக்குதலாக இருக்கலாம். அல்லது பேரழிவை ஏற்படுத்தக்கூடிய இந்த இரசாயனத்தின் கட்டுப்பாட்டை ரஷ்ய அரசாங்கம் இழந்து பிறரின் கைகளில் செல்வதற்கு அனுமதியளித்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான விரிவான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரித்தானியா தயாராக இருக்க வேண்டும் என்றும் ரஷ்யாவிடமிருந்து போதிய விளக்கம் வரவில்லை எனில் நாளை புதன்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்படும் என்றும் மே தெரிவித்துள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பாக விளக்கம் அளிப்பதற்கு ரஷ்ய தூதுவருக்கு பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்றுக்கொள்ளக்கூடிய பதில் வழங்கப்படவில்லையென்றால், சட்டவிரோத நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது என்ற முடிவுக்கு பிரித்தானியா வரும் என்றும் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான 66 வயதுடைய செர்கெய் ஸ்கிர்பாலும் அவரது 33 வயதுடைய மகளான யூலியாவும், பிரித்தானியாவின் Salisbury பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மயக்கமடைந்த நிலையில், கடந்த 4ஆம் திகதி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg