Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமைச்சர் நிர்மலா சீதாராமன் சீனா விஜயம்

In இந்தியா
Updated: 06:40 GMT, Mar 13, 2018 | Published: 04:01 GMT, Mar 13, 2018 |
0 Comments
1216
This post was written by : Kemasiya

டோக்லாம் விவகாரத்தினால் இந்தியா மற்றும் சீனாவிற்கிடையில் விரிசல் நிலைமை நீடிக்கின்ற நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

டெல்லியில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் இத்தகவலை தெரிவித்துள்ளார். எனினும், இவ்விஜயத்தின் நோக்கம் குறித்து எவ்வித தகவல்களையும் அவர் குறிப்பிடவில்லை.

இந்தியா, சீனா மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள டோக்லாமில், கடந்த ஆண்டு சீன ராணுவம் வீதி அமைக்கும் பணியை தொடங்கியது. இதனை இந்திய ராணுவம் தடுத்ததை தொடர்து மோதல் ஏற்பட்டது.

அதன் பின்னர் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்குமிடையில் டோக்லாம் விடயத்தில் விரிசல் நிலைமை நீடிக்கின்ற நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சரின் குறித்த விஜயம் டோக்லாம் விவகாரம் தொடர்பில் அமையப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg