Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெக்ஸாசில் குண்டு வெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு

In
Updated: 05:18 GMT, Mar 13, 2018 | Published: 05:18 GMT, Mar 13, 2018 |
0 Comments
1143
This post was written by : Elakkiya

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஒஸ்ரின் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதல் சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வீட்டின் முன்பாக இருந்த பொதியை வீட்டு சமயலறைக்குள் எடுத்துச் சென்ற போது அது வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று மற்றுமொரு வீட்டில் பொதிசெய்யப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 40 வயது பெண் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது போன்ற சம்பவம் கடந்த 2ஆம் திகதியும் இடம்பெற்றதில் 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்தார்.

மேற்படி மூன்று வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாகவும் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg