Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்மையைப் போற்றும் ஐஸ்வர்யா தனுஷின் பாடல்

In சினிமா
Updated: 08:40 GMT, Mar 13, 2018 | Published: 06:13 GMT, Mar 13, 2018 |
0 Comments
1076
This post was written by : Velauthapillai Kapilan

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘பாதையில் இருட்டு’ எனும் பாடலை ஐஸ்வர்யா தனுஷ் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு இளையராஜாவின் மகள் பவதாரணி இசையமைத்துள்ளார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு பாடியுள்ள இந்த பாடலை இளையராஜாவின் மகள் பவதாரணி இசையமைக்க லேடி காஷின் பாடலுக்கான வரியினை எழுதியுள்ளார்.

பெண்ணின் பெருமையை கூறும் இந்தப் பாடல் ‘பாதையில் இருட்டு கனவுகள் வெடித்து’ என்று ஆரம்பித்து ‘நீங்களே உலகத்தைக் கேளுங்கள்’ (Can You Hear The World) எனும் தொனிப்பொருளில் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டுள்ளது.

இப்பாடலை ஆர்.ரைஹானா, சுமா ஹாரிஸ், ஷாலினி சிங், ரீடா, அனிதா, விங், லயா பண்டி பாஸ்கர் மற்றும் பாவதாரணி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இதேபோல் கடந்த வருடம் மகளிர் தினத்தில் ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா.வில் ஆடிய பரதநாட்டியம் பெரும் விமர்சனத்தை பெற்றிருந்த நிலையில் இந்த வருடம் மகளிர் தினத்தில் அவர் பாடிய பாடலுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg