Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதுக்குடியிருப்பில் 19 கிராம அலுவலர் பிரிவுகளிலும் மீள்குடியேற்றம்

In இலங்கை
Updated: 08:32 GMT, Mar 13, 2018 | Published: 06:05 GMT, Mar 13, 2018 |
0 Comments
1099
This post was written by : poovannan

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 19 கிராம அலுவலர் பிரிவுகளிலும் தற்போது மீள் குடியேறியிருப்பதாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அறிமுக உரையாற்றிய பிரதேச செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.

புதுக்குடியிருப்பு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போது,  இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் இதுவரை 13224 குடும்பங்களைச் சேர்ந்த 40326 பேர் மீள் குடியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 1729 பெண் தலைமைத்துவம் தாங்கும் குடும்பங்களும் 707 மாற்றுத்திறனாளிகளும் 156 வரையான வாழ்கைத் துணையை இழந்தவர்களும் அடங்குவதாக மேற்படி அறிமுக உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg