Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இதுவொரு முழுமையான கூட்டு முயற்சி: தினேஷ்-பான்டேவிற்கு ரோஹித் பாராட்டு

In கிாிக்கட்
Updated: 09:30 GMT, Mar 13, 2018 | Published: 06:20 GMT, Mar 13, 2018 |
0 Comments
1294
This post was written by : Anojkiyan

சுதந்திரக் கிண்ண தொடரின் இலங்கை அணிக்கெதிரான போட்டியில், சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றுக் கொடுத்து அணியின் வெற்றிக்கு துணைநின்ற தினேஷ் கார்த்திக் மற்றும் மனிஷ் பான்டேவிற்கு இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இந்திய வீரர்களின் செயற்பாடு புத்தசாலித்தனமாக இருந்தது. குறிப்பாக பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டனர். இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையை திணறடித்து கட்டுப்படுத்தினர்.

இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வீசுவது எளிதான காரியமல்ல. ஏனென்றால் பனித்துளி இருந்தது. அவர்கள் கடும் முயற்சி செய்து சிறப்பாக வீசி இருக்கிறார்கள். பந்துவீச்சாளர்கள் தங்களது திட்டத்தை நல்ல முறையில் செயற்படுத்தினார்கள்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg