Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டு வந்த தங்கைக்கு தோல்வியை பரிசளித்தார் வீனஸ்!

In டெனிஸ்
Updated: 09:26 GMT, Mar 13, 2018 | Published: 06:42 GMT, Mar 13, 2018 |
0 Comments
1176
This post was written by : Anojkiyan

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், அவரது சகோதரியான வீனஸ் வில்லியம்ஸிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்தியன் வெல்ஸ் என அறியப்படும் பி.என்.பி பரிபாஸ் பகிரங்க டென்னிஸ் போட்டிகள் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்று வருகின்றன.

இதில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற முன்றாம் சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனைகளும், சகோதரிகளுமான செரீனா மற்றும் வீனஸ் பாசம் கலந்த ஆக்ரோஷத்துடன் மோதிக்கொண்டனர்.

இதுவரை காலமும் வீனஸிற்கு அதிர்ச்சி கொடுத்துவந்த செரீனா, இந்த போட்டியில் எதிர்பாராத விதமாக வீனஸிடம் மண்டியிட்டார். வழமையை விட சற்று ஆக்ரோஷமாக விளையாடிய வீனஸ் 6-3,6-4 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். செரீனா தொடரை விட்டு வெளியேறினார்.

தாய்மையடைந்ததன் பின்னர் கடும் விமர்சனத்திற்கு மத்தியில் டென்னிஸ் அரங்கிற்குள் மீள் பிரவேசித்த செரீனா, தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில், இந்த தோல்வியும் அவரை மனதளவில் பெரிதும் பாதித்துள்ளது. இதனால் அவர் விரைவில் டென்னிஸ் அரங்கிலிருந்து விடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg