Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சோல்ஸ்பரி பகுதியில் வாகனங்களை சோதனையிடும் பொலிஸார்

In
Updated: 07:00 GMT, Mar 13, 2018 | Published: 07:00 GMT, Mar 13, 2018 |
0 Comments
1160
This post was written by : Elakkiya

ரஷ்ய முன்னாள் உளவாளி சந்தேகத்திற்குரிய வகையில் மயக்கமடைந்ததாக கூறப்படும் சோல்ஸ்பெரி பகுதியை அண்மித்த இடங்களில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸார் வின்டர்சிலோ (Winterslow) பகுதியில் வெள்ளை நிற வான் ஒன்றை ஆய்வு செய்ததாக கூறப்படுகின்றது.

சோல்ஸ்பெரி நகரின் வடகிழக்கு பகுதியிலிருந்து ஆறு மைல் தூரத்தில் அமைந்துள்ள குறித்த கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த வாகனத்தை பொலிஸார் சோதனை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அது தொடர்பில் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான 66 வயதுடைய செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது 33 வயதுடைய மகளான யூலியாவும், பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் மயக்கமடைந்த நிலையில் கடந்த 4ஆம் திகதி மீட்கப்பட்டனர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யாவே தொடர்புபட்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg