Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெல் மற்றும் மரக்கறிகளின் விலை குறைவடையும் வாய்ப்பு!

In இலங்கை
Updated: 06:58 GMT, Mar 13, 2018 | Published: 06:58 GMT, Mar 13, 2018 |
0 Comments
1074
This post was written by : Vithushagan

பெரும்போக செய்கையின் மூலம் அறுவடை செய்யப்பட்ட மரக்கறி மற்றும் நெல்  சந்தைக்கு வருவதால் இவற்றின் விலை எதிர்வரும் மாதங்களில் குறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 7 மாதங்களுக்குத் தேவையான நெல் அறுவடை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாக விவசாய ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இம்முறை பெரும்போகத்தில் 23 இலட்சம் மெற்றிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்பட்டது. இதனால், எதிர்வரும் தினங்களில் திறந்த சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 80 ரூபாய் வரை குறைவடையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், யாழ்ப்பாணம், தம்புத்தேகம, புத்தளம் ஆகிய பகுதிகளில் இருந்து மரக்கறி அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதனால், மரக்கறியின் விலையிலும் எதிர்காலத்தில் வீழ்ச்சி ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகளும் 80 ரூபாவில் இருந்து 120 ரூபாவிற்கு இடைப்பட்ட மட்டத்தில் இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg