Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுவிப்பு

In கிாிக்கட்
Updated: 08:44 GMT, Mar 13, 2018 | Published: 07:08 GMT, Mar 13, 2018 |
0 Comments
1166
This post was written by : Anojkiyan

நாரஹெண்பிட்டியில் பல்கலைக்கழக மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கிரிக்கெட் வீரரான ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி இரு மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ரமித் ரம்புக்வெல்ல மீதான வழக்கு விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவரை ஐந்து இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.

அத்தோடு, ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப் பத்திரத்தையும் தற்காலிகமாக இரத்துச் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டதோடு குறித்த வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

ரமித் ரம்புக்வெல்ல வாகனத்தில் சென்றுகொண்டிருந்த வேளை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனத்தை மோதியதாகவும், பின்னர் இவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் ரமித் ரம்புக்வெல்ல தன்னிடமிருந்த துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாகவும் இதேவேளை ரமித் ரம்புக்வெல்ல குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினரான கெஹெலிய ரம்புக்வெலவின் புதல்வனான ரமித் ரம்புக்வெல்ல இதுவரை இரு சர்வதேச ரி-ருவென்ரி போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg