Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெரிடோ மொரேனோ பனிப்பாறை உடைந்து நொருங்கும் காட்சிகள்

In உலகம்
Updated: 06:58 GMT, Mar 13, 2018 | Published: 06:58 GMT, Mar 13, 2018 |
0 Comments
1222
This post was written by : Varothayan

ஆர்ஜென்டீனாவின் படகோனியா பிராந்தியத்தில் அமைந்துள்ள பெரிடோ மொரேனோ (Perito Moreno) பனிப்பாறை உடைந்து விழும் காட்சிகள் கமெரா கண்களுக்குள் பதிவாகியுள்ளன.

ஆண்டுதோறும் இவ்வாறான நிலைமை குறித்த பனிப்பாறையில் ஏற்படுவதுடன், இதனைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு குழுமியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லொஸ் க்ளாசியாரெஸ் தேசிய பூங்காவில் அமைந்துள்ள பனிப்பாறை உடைந்து விழும் காட்சிகளை ஆர்ஜென்டீனாவின் தேசிய பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஏறக்குறைய 250 சதுர கிலோமீற்றர் பரப்பளவான பகுதியில் படர்ந்துள்ள பனிப்பாறைகள், லகோ ஆர்ஜென்டீனோ என்ற ஏரிக்குள் ஆண்டுதோறும் உடைந்து விழுவது வழக்கமாகும். பனி உருகும் போது, ஏரிக்குள் ஒரு சுரங்கப்பாதையும் உருவாவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை வரை அதிகளவிலான பனிப்பாறைகள் உடைந்ததாகவும், அடுத்த சில நாட்களுக்கு பனிக்கட்டிகள் உடைந்து விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg