Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய உளவாளி விவகாரம்: பிரதமரின் நடவடிக்கைக்காக காத்திருக்கும் குடியிருப்பாளர்கள்

In
Updated: 07:24 GMT, Mar 13, 2018 | Published: 07:24 GMT, Mar 13, 2018 |
0 Comments
1190
This post was written by : Elakkiya

ரஷ்யாவின் முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் விவகாரத்தில் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே எடுக்கப்போகும் நடவடிக்கைக்காக காத்திருப்பதாக சோல்ஸ்பெரி பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான 66 வயதுடைய செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது 33 வயதுடைய மகளான யூலியாவும், பிரித்தானியாவின் சோல்ஸ்பெரி பல்பொருள் அங்காடியொன்றில் சந்தேகத்திற்கு உரிய வகையில் மயக்கமடைந்த சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த இருவரும், ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட நரம்பு மண்டலங்களை பாதிக்கக் கூடிய இரசாயனத்தால் தாக்கப்பட்டே மயக்கமடைந்தனர் எனவும் இதற்கான பொறுப்பை ரஷ்யாவே ஏற்க வேண்டும் என்றும் பிரித்தானிய பிரதமர் தெரசோ மே நாடாளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பிரதமர் தெரேசா மே எத்தகைய நடவடிக்கைகயை எடுக்கப் போகிறார் என்பதை அறிந்து கொள்வதற்கு தாம் காத்திருப்பதாக சோல்ஸ்பெரி பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த உள்ளூர் குடியிருப்பாளர் ஒருவர், ரஷ்யா செய்ததை நிரூபிக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை 24 வயது பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “எவ்வொருவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்திருப்பர். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் பிரதமர் தெரேசா மேயின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதை அறிய காத்திருக்கின்றனர். அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை எதிர்பார்த்திருப்பர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்த விடயம் வெளிப்படையாக பயங்கரமான மற்றும் விவகாரமானதாக அமைந்துள்ளது. அத்துடன் முன்னுக்கு பின் முரணானதாகவும் உள்ளது” என்று மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg