Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஸி. மண்ணில் நிலைகுலைந்தது இந்திய மகளிர் அணி!

In கிாிக்கட்
Updated: 09:03 GMT, Mar 13, 2018 | Published: 07:27 GMT, Mar 13, 2018 |
0 Comments
1195
This post was written by : Anojkiyan

இந்திய மற்றும் அவுஸ்ரேலிய மகளிர் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், அவுஸ்ரேலிய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) வடோதரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக பூஜா வஸ்த்ரகார் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் ஜீஸ் ஜோனாசின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து 201 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, 32.1 ஓவர்கள் நிறைவில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை கடந்தது.

இதில் அவுஸ்ரேலிய அணி சார்பில் நிக்கோல் போல்டொன் ஆட்டமிழக்காது 100 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதோடு, போட்டியின் ஆட்டநாயகியாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, எதிர்வரும் 15ஆம் திகதி வடோதரா மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg