Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட சீனாவிற்கு அனுமதியளியோம்- ஜனாதிபதி

In இலங்கை
Updated: 07:46 GMT, Mar 13, 2018 | Published: 07:46 GMT, Mar 13, 2018 |
0 Comments
1598
This post was written by : Risha

அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த சீனாவிற்கு ஒருபோதும் அனுமதியளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

ஜப்பானுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று (திங்கட்கிழமை) அந்நாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, ”தெற்கு அம்பாந்தோட்டை துறைமுகம், இலங்கை அரசாங்கத்தினால் சீனாவிற்கு 99 ஆண்டுக்கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த துறைமுகமானது சீனாவினால் இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடும் என உலக நாடுகள் கவலை வெளியிட்டுள்ளமையை அறிவேன்.

இந்நிலையில், பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக தமது செயற்பாடுகள் அமையாது என்பதை சீனா தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும். எனினும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவ செயற்பாடுகளுக்கு பயன்படுத்த சீனாவிற்கு எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதியளிக்காது.

ஆனால், இவ்வாறான செயற்பாடுகளில் சீனா ஈடுபடுமாயின் அது இருதரப்பு உடன்பாட்டை மீறும் நடவடிக்கையாகவே அமையும்” என்றும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg