Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

5473 ஆசியர்களுக்கு விரைவில் இடமாற்றம்: கல்வியமைச்சு

In இலங்கை
Updated: 08:24 GMT, Mar 13, 2018 | Published: 08:24 GMT, Mar 13, 2018 |
0 Comments
1068
This post was written by : Yuganthini

ஒரே பாடசாலையில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் 5473 ஆசியர்களை இந்த மாத இறுதியில் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்பொருட்டு 6 தொடக்கம் 11 ஆம் தர வகுப்புக்களில் 10 வருட காலமாக பணிபுரியும் ஆசிரியர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த தேசிய திட்டம் கடந்த வருடத்திலிருந்து 3 கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதலாம் கட்டமாக க.பொ.த.உயர்தர ஆசிரியர்கள் 2590 பேர் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 1 தொடக்கம் 5 ஆம் தர வகுப்புக்களில் 10 ஆண்டுகளாக பணிப்புரிந்த 760 ஆசிரியார்களுக்கு கல்வி அமைச்சினால் இடமாற்றம் வழங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 6 தொடக்கம் 11 ஆம் தர வகுப்புக்களில் 10 வருட காலமாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இடமாற்றத்தினை வழங்க கல்வியமைச்சு நடவடிக்கையை தற்போது  முன்னெடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg