Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூக வலைத்தளங்களில் இனவாத கருத்துகளை பரப்புவதை தடுக்க வேண்டும்: லண்டன் மேயர்

In
Updated: 08:52 GMT, Mar 13, 2018 | Published: 08:51 GMT, Mar 13, 2018 |
0 Comments
1185
This post was written by : Elakkiya

சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்கள் பரப்பப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடக நிறுவனங்களிடம் லண்டன் மேயர் சாதிக்கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெக்சாஸில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேயர் சாதிக்கான், கொலை மிரட்டல் உள்ளிட்ட இணையத்தில் பரப்பப்படுகின்ற இனவாத கருத்துக்கள் சிலவற்றை சுட்டிக்காட்டியதுடன், துஷ்பிரயோகத்தின் அளவு, சிறுபான்மை பின்னணியிலிருந்து அரசியலுக்குள் நுழைவதை தடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், விமர்சனங்கள் மற்றும் மேலும் பல கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தமது திறனை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல்கள் மற்றும் கருத்துக் கணிப்புக்களின் போது சமூக வலைத்தளங்கள் பெருமளவில் செல்வாக்கு செலுத்துவதுடன் போலிச் செய்திகளை பரப்புதல் மற்றும் தீவிரவாதத்தை பரப்புவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். மேலும், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்டவை விமர்சகர்களுக்கு தளமாக மாறிவிடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இவற்றை கட்டுப்படுத்துவதற்கான திறன்கள் மற்றும் வளங்களை குறித்த நிறுவனங்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மேயர் சாதிக்கான் வலியுறுத்தியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg