Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குரங்கணி தீ விபத்து: உயிரழப்பு 11 ஆக அதிகரிப்பு!

In இந்தியா
Updated: 08:53 GMT, Mar 13, 2018 | Published: 08:53 GMT, Mar 13, 2018 |
0 Comments
1135
This post was written by : Kemasiya

தேனி மாவட்டம் குரங்கணி மலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

குறித்த தீ விபத்தில் 9 பேர் முதலில் உயிரிழந்திருந்த நிலையில், மேலும் ஒன்பது பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் இருவர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உயிரிழந்தனர்.

அத்துடன் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் 7 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

திருப்பூர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இரு குழுக்கள், குரங்கணி மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg