Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கண்டி சம்பவத்தினால் கடும் நெருக்கடிக்குள் இலங்கை!

In இலங்கை
Updated: 12:07 GMT, Mar 13, 2018 | Published: 08:55 GMT, Mar 13, 2018 |
0 Comments
1262
This post was written by : Risha

ஐ.நா.வின் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள இலங்கை அரசாங்கத்திற்கு, கண்டி சம்பவம் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன எச்சரித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான நெருக்கடிகள் குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் நடவடிக்கைள் குறித்து ஐ.நா. ஆணையாளர் ஏற்கனவே அதிருப்தி வெளியிட்டுள்ள தருணத்தில், கண்டியில் இடம்பெற்ற இனங்களுக்கு இடையிலான மோதலானது நாட்டின் மீதான சர்வதேசத்தின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது.

ஐ.நா. கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் அடுத்த வாரம் விவாதிக்கப்படவுள்ளது. இந்நிலையில், அதன்போது சிறுபான்மை மக்கள் மீதான அடக்குமுறை சம்பவங்கள் குறித்து கேள்வி எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இவை எமக்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும்” என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கண்டி சம்பவத்தின் எதிரொலியாக சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறித்து வெளிநாடு வாழ் இலங்கையர்களின் பாரிய எதிர்ப்பை அரசாங்கம் சந்திக்க நேரிடுவதுடன், நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக பின்னடைவினை எதிர்நோக்கக்கூடுமென, அயல் நாட்டை வாழ்விடமாக கொண்ட இலங்கையர்களின் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சுபாசன அபயவிக்ரம எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg