Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெக்சிகோ எல்லைச்சுவர் மதிப்பீட்டுக்காக ட்ரம்ப் கலிபோர்னியா விஜயம்

In
Updated: 09:07 GMT, Mar 13, 2018 | Published: 09:07 GMT, Mar 13, 2018 |
0 Comments
1280
This post was written by : Elakkiya

சர்ச்சைக்குரிய மெக்சிகோ எல்லைச்சுவர் முன் மாதிரியை மதிப்பீடு செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (செவ்வாய்க்கிழமை) கலிபோர்னியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக கலிபோர்னியாவுக்கு ட்ரம்ப் விஜயம் செய்கிறார். இந்நிலையில், சார்பு மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய மெக்சிகோ எல்லைச்சுவர் அமைக்கும் திட்டத்திற்கான முன்மாதிரியை அமைப்பதற்கு நான்கு நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. 9 மீற்றர் நீளமும் 30 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்படும் இந்த எல்லைச்சுவர் முன்மாதிரிப் பணிகள் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் இவற்றை பார்வையிடுவதற்காக இன்று கலிபோர்னியா செல்லும் ட்ரம்ப் அதனைத் தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்ஸூக்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg