Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காவிரி நீர் விவகாரம் – தமிழக சட்டசபையை கூட்ட தீர்மானம்

In இந்தியா
Updated: 17:18 GMT, Mar 13, 2018 | Published: 09:13 GMT, Mar 13, 2018 |
0 Comments
1118
This post was written by : Kemasiya

காவிரி நீர் விவகாரம் தொடர்பில் தி.மு.க.வின் கோரிக்கைகள் உள்ளடங்கிய தீர்மானங்களை நிறைவேற்ற தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எதிர்வரும் 15ஆம் திகதி சட்டசபையை கூட்டி குறித்த தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளதாக தமிழக அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காவிரி மேலாண்மை வாரியம் 6 மாத காலத்திற்குள் அமையப்பெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கர்நாடகா அரசின் அனைத்து கட்சிகள் கூட்டத்தில் தமிழகத்தின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

எனவே எதிர்வரும் 15ஆம் திகதி சட்டமன்றத்தின் வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடர் நிறைவடைந்ததும், இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்ற தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg