Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் முடிவுக்கு பிரித்தானியா வருத்தப்படும்: ஜேன் கிளவுட் ஜங்கர்

In
Updated: 09:32 GMT, Mar 13, 2018 | Published: 09:31 GMT, Mar 13, 2018 |
0 Comments
1211
This post was written by : Elakkiya

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் முடிவு தொடர்பாக பிரித்தானியா வருத்தப்படும் நிலை உருவாகும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜேன் கிளவுட் ஜங்கர் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஜேன் கிளவுட் ஜங்கர் உரையாற்றும் போது ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் வரவேற்பை பெற்றுக் கொண்டார்.

இதன்போது, எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி பிரித்தானியாவின் புறப்பாடு என்பதை சுட்டிக்காட்டிய ஜேன் கிளவுட் ஜங்கர், “நீங்கள் உங்கள் முடிவுக்காக வருத்தப்படுவீர்கள்” என்றும் கூறினார்.

அதேவேளை பிரித்தானியா விமர்சனங்கள் மற்றும் கோஷங்களை தாண்டிச் செல்ல வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரெக்சிற் பிரதிநிதி Guy Verhofstadt  தெரிவித்துள்ளார். எனினும், ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும், பிரெக்சிற்றுக்கு பின்னரான குடிமக்கள் உரிமைப் பிரகடனத்தில் மிக அருகில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg