Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேரூந்து விபத்தில் 11 பேர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 10:13 GMT, Mar 13, 2018 | Published: 09:34 GMT, Mar 13, 2018 |
0 Comments
1116
This post was written by : Kemasiya

உத்தரகாண்ட மாநிலத்தில் பேருந்து குடைசாய்ந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில்  11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்மோரா மாவட்டம் டேகாத் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சாரதி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே குறித்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேலும் 13 பேர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுவதாகவும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அல்மோரா மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg