Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காசநோயை முற்றாக ஒழிப்போம்: பிரதமர் உறுதி

In இந்தியா
Updated: 10:17 GMT, Mar 13, 2018 | Published: 09:43 GMT, Mar 13, 2018 |
0 Comments
1095
This post was written by : Kemasiya

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்தியாவில் காசநோய் முற்றாக ஒழிக்கப்படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காசநோயை ஒழிப்போம் எனும் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதமர் மேற்படி தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“இந்தியாவில் காசநோய் இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. அதனை ஒழிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் காசநோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஏழை மக்கள் இந்நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலை குறித்து ஆராய வேண்டும். அதனால் நாம் புதிய வழிமுறைகளை கையாள வேண்டும்.

இந்தியாவில் காசநோயானது 2025ஆம் ஆண்டிற்குள் முற்றிலுமாக ஒழிக்கப்படும். அதனை நோக்காகக் கொண்டு செயற்பட வேண்டும். பல மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இணைந்து செயற்பட்டால் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும்.

காசநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டாலும் அதனைத் தடுப்பதற்கு ஒருவருடம் போதும். விரைவில் காசநோய் பரவுவதை தடுப்பது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg