Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்கள் நடத்தப்படுவதை எதிர்க்கின்றோம்: சிவாஜிலிங்கம்

In இலங்கை
Updated: 11:39 GMT, Mar 13, 2018 | Published: 10:12 GMT, Mar 13, 2018 |
0 Comments
1102
This post was written by : poovannan

வடக்கு மாகாண சபை அமர்வு நாட்களில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுப்போம் என வடக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் 118 ஆவது அமர்வு கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “வடக்கு மாகாண சபை அமர்வு இன்று நடைபெறுகின்றது என்பதை அறிந்தும், கரவெட்டி பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெறுகின்றது. இதனால் மாகாண சபை உறுப்பினர்கள் அமர்வுக்கு சமுகமளிப்பதா அல்லது ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு சமூகமளிப்பதா?

மாகாணத்திற்கு தெரியாமல் மத்திய அரசாங்கம் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்குடனேயே மாகாண சபை அமர்வு நடைபெறும் நாளில் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தையும் ஒழுங்கு செய்கின்றார்கள்.

எதிர்வரும் காலங்களில் மாகாண சபை அமர்வு நடைபெறும் நாளில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டால் அதற்கு எதிராக போராடுவோம்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg