Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்ய உளவாளி விவகாரம்: பிரித்தானியாவுக்கு துணையாக ஐரோப்பிய ஒன்றியம்

In ஐரோப்பா
Updated: 11:50 GMT, Mar 13, 2018 | Published: 09:50 GMT, Mar 13, 2018 |
0 Comments
1118
This post was written by : Elakkiya

ரஷ்ய முன்னாள் உளவாளியான செர்கெய் ஸ்கிர்பால் விவகாரத்தின் பின்னணியில் மொஸ்கோ இருப்பதாக பிரித்தானியா குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பிரித்தானியாவுக்கு துணை நிற்கும் என ஒன்றியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவர் வல்டிஸ் டொம்புறோவ்ஸ்கி (Valdis Dombrovskis), ” நாம் மிகவும் கவலையடைந்துள்ளோம். இந்த விடயத்தில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமையை நம்பலாம். பிரித்தானிய அரசாங்கத்துக்கும் பிரித்தானிய மக்களுக்கும் எனது பலமான உணர்வுகளை வெளிப்படுத்த விரும்புகின்றேன். நாம் உங்களுடன் நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான 66 வயதுடைய செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது 33 வயதுடைய மகளான யூலியாவும், பிரித்தானியாவின் சாலிஸ்பரி பல்பொருள் அங்காடியொன்றில் சந்தேகத்திற்கு உரிய வகையில் மயக்கமடைந்த சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த இருவரும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட நரம்பு மண்டலங்களை பாதிக்கக் கூடிய இரசாயனத்தால் தாக்கப்பட்டே மயக்கமடைந்தனர் எனவும் இதற்கான பொறுப்பை ரஷ்யாவே ஏற்க வேண்டும் என்றும் பிரித்தானிய பிரதமர் தெரசோ மே நாடாளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg