Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

6 அத்தியாயம் : திரை விமர்சனம்

In திரை விமர்சனம்
Updated: 09:53 GMT, Mar 13, 2018 | Published: 09:53 GMT, Mar 13, 2018 |
0 Comments
1082
This post was written by : Ravivarman

அமானுஷ்யங்கள் அடங்கிய 6 கதைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது ‘6 அத்தியாயம்’ திரைப்படம்.

6 அத்தியாயங்களுக்காகவும் தனித்தனியாகப் பணியாற்றிய கேபிள் சங்கர், சக்தி வி.தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ் இ.ஏ.வி., லோகேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் என அனைவரும் செய்த வேலைகளில் சிறப்பாக பணியாற்றி இருக்கின்றனர்.

சினிமா வரலாற்றில் முதல் முறையாக அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ள, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாக வரும் கிளைமாக்சில் தனித்தனியாக சொல்லப்படுகிறது.

ஒரு சில இடங்களில் திரைக்கதை ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை என்றாலும், இரசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

தனித்தனியாக குறிப்பிட்டுக் கூறாமல் 6 அத்தியாயங்களிலும் நடித்த தமன் குமார், எஸ்.எஸ்.ஸ்டான்லி, பாப் சுரேஷ், பேபி சாதன்யா, திவ்யா, கிஷோர், மதுஸ்ரீ, பிரசன்னா, கதிர், ராண்டில்யா, விஷ்ணு, பிரான்சிஸ், சந்திரகாந்தா, சங்கீதா, ஈஸ்வரி, வினோத் கிஷன், அரவிந்த ராஜகோபால், சோமு சுந்தர், சாருலதா ரங்கராஜன் என அனைத்து கதாபாத்திரங்களுமே அவரவர்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருந்ததுடன் கதாபாத்திரத்திற்கு மெருகேற்றி இருக்கின்றனர்.

ஒளிப்பதிவில் சி.ஜே.ராஜ்குமார் (2 அத்தியாயங்கள்), பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோராஜா (தலா ஒரு அத்தியாயம்) இவர்களின் பங்கு சிறப்பு. இன்னமும் மெருகேற்றி இருக்கலாம். பி.சி.சாம், தாஜ்நூர், ஜோஷ்வா, ஜோஸ் பிராங்க்ளின், சதீஷ் குமார் என அனைவருமே பின்னணியில் கலக்கியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் ‘6 அத்தியாயம்’ அலட்டல் இல்லை, பார்க்கலாம்!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg