Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சதீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாத தாக்குதல்: பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 11:43 GMT, Mar 13, 2018 | Published: 09:59 GMT, Mar 13, 2018 |
0 Comments
1134
This post was written by : Kemasiya

சதீஸ்கர் மாநிலத்தில் மாவோயிட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் எட்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது வெடிகுண்டு வெடித்ததில் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மண்ணில் புதைத்து வைத்தே குறித்த வெடி குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு பொலிஸார் மற்றும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சம்பவத்தினால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காஷ்மீரை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதனால் அவ்வப்போது தாக்குதலில் பொதுமக்களும் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் அப்பகுதியில் மக்கள் எப்போதும் இயல்பு வாழ்க்கையை இழந்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg