Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரோடில் மூன்றாவது நாளாக பரவிவரும் காட்டுத்தீ!

In இந்தியா
Updated: 11:29 GMT, Mar 13, 2018 | Published: 10:22 GMT, Mar 13, 2018 |
0 Comments
1131
This post was written by : Kemasiya

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கள புலிகள் காப்பக வனப்பகுதியில், மூன்றாவது நாளாகவும் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை பரவ ஆரம்பித்த காட்டுத்தீ தொடர்ந்தும் இன்று (திங்கட்கிழமை) வரை பரவி வருவதாக வனவளத்திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

வறட்சியின் காரணமாக வனத்தின் பெரும்பாலான பகுதிகள் கருகி கிடப்பதால் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனால் மூலிகைகள் மற்றும் விலையுயர்ந்த மரங்கள் என காடு முற்றாக கருகி வருவதாகவும், தீயை கட்டுக்கள் கொண்டுவர 50 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் வனவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கர்நாடகா – தமிழக எல்லை கேர்மாளா வனப்பகுதியிலும் தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg