Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கூட்டாளி : திரைவிமர்சனம்

In திரை விமர்சனம்
Updated: 10:11 GMT, Mar 13, 2018 | Published: 10:10 GMT, Mar 13, 2018 |
0 Comments
1072
This post was written by : Ravivarman

குத்தகைப் பணம் கட்டாத வாகனங்களைக் கைப்பற்றி எடுத்து வரும் வேலையைப் பார்க்கும் சதீஷிற்கும், அவருடைய நண்பர்களுக்கும் அந்த ஏரியாவில் செல்வாக்கு மிகுந்தவராக இருக்கும் அருள்தாஸ் பக்க பலமாக இருக்கிறார்.

இப்படி வாகனங்களைத் தூக்கி வரும் சதீஷ், அரசியல்வாதி ஒருவரின் காரையும் தூக்கி விடுகிறார். இதை அவமானமாகக் கருதும் அந்த அரசியல்வாதி, சதீஷ்ஸைக் கொலை செய்ய நினைக்கிறார்.

இந்நிலையில், பாண்டிச்சேரியில் இருந்து கார் ஒன்றை எடுத்து வரும் சதீஷ், எதிர்பாராதவிதமாக நாயகி கிரிஷா க்ரூப் மீது மோதி விட்டு சென்று விடுகிறார். சென்னை வந்தும், நாயகி கிரிஷாவிற்கு என்ன ஆனது என்று நினைத்து வருந்துகிறார். இந்நிலையில், சென்னையில் கிரிஷா க்ரூப்வை சந்திக்கும் சதீஷ் அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். அவரது மன்னிப்பை ஏற்க மறுக்கிறார் கிரிஷா.

பின்னர், சதீஷ்வின் நல்ல குணங்களை அறிந்து, அவர் மீது காதல் வயப்படுகிறார். இவர்களது காதல் கிரிஷாவின் அப்பாவான பொலிஸ் அதிகாரி கல்யாண் மாஸ்டருக்கு தெரிய வந்து, இந்த காதலைப் பிரிக்க நினைக்கிறார்.

இறுதியில் சதீஷ், கிரிஷாவுடன் இணைந்தாரா? அரசியல்வாதி சதீஷ்வை பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ் ஆக்ஷன், காதல், காட்சிகளில் திறமையாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார்.  நண்பர்களுடன் சேர்ந்து காரை தூக்குவது என ஒரு சில இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகி கிரிஷா க்ரூப், சதீஷ் மீது ஆசைப்படுவது, பிரச்சனையில் சிக்கும் போது, அவருக்காக ஏங்குவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சேட், அரசியல்வாதி, அருள்தாஸ் ஆகியோர் தங்களுடைய அனுபவ நடிப்பால் இரசிக்க வைத்திருக்கிறார்கள். பொலிஸ் அதிகாரியாக வரும் கல்யாண் மாஸ்டர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்கள்.  ஏற்கனவே பார்த்த காட்சிகள், யூகிக்கும் காட்சிகள் என அடுத்தடுத்து வந்து படத்திற்கு தொய்வை ஏற்படுத்தி இருக்கிறது. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.

பிரிட்டோ மைக்கேல் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு இரசிக்க முடிகிறது. சுரேஷ் நட்ராஜனின் ஒளிப்பதிவு சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘கூட்டாளி’க்கு கூட்டணியும் குறைவு – கூட்டமும் குறைவு!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg