Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விமானப் பணிப்பெண்ணிற்கு முத்தமிட்ட ரோபோ சங்கர்

In சினிமா
Updated: 10:36 GMT, Mar 13, 2018 | Published: 10:36 GMT, Mar 13, 2018 |
0 Comments
1633
This post was written by : Velauthapillai Kapilan

ஒரு விமானப் பணிப்பெண்ணிற்கு நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் முத்தமிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் ரோபோ சங்கர். இவர் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் தொடர்பான ஒரு காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதில் விமானத்தில் இருக்கும் அவர் ஒரு விமானப்பணிப்பெண்ணிடம் ‘நாங்கள் 5 பேர் இருக்கிறோம். பசிக்கிறது உணவு வேண்டும். ஐ லவ் யூ என்று கூறிவிட்டு அவரின் கையில் முத்தம் இடுகிறார் அந்த பெண் வெட்கத்துடன் அங்கிருந்து விலகி செல்கிறார்.’ இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg