Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முட்டை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது!

In வணிகம்
Updated: 10:42 GMT, Mar 13, 2018 | Published: 10:42 GMT, Mar 13, 2018 |
0 Comments
1064
This post was written by : Vithushagan

நாட்டில் போதுமான அளவு முட்டைகள் சந்தையில் காணப்படுவதால் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லை என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிகால் வெடிசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பி. ஹெரிசனுக்கு நிகால் வெடிசிங்க அறிவுறுத்தியுள்ளார்.

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லை என்பதால், அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அது தொடர்பில் இலங்கை துறைமுகம் மற்றும் சுங்கப் பிரிவிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு போதுமான அளவு முட்டைகள் இருப்பதால் எந்தவொரு இறக்குமதியாளர்களுக்கும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அமைச்சர் தனக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நிகால் வெடிசிங்க கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg