Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பலஸ்தீன பிரதமரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்!

In உலகம்
Updated: 10:52 GMT, Mar 13, 2018 | Published: 10:52 GMT, Mar 13, 2018 |
0 Comments
1198
This post was written by : Elakkiya

காஸாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பலஸ்தீன பிரதமர் ராமி ஹம்டல்லா நூலிழையில் உயிர்பிழைத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலஸ்தீன பிரதமர் ராமி ஹம்டல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இன்று காஸாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அவருடைய வாகனத் தொடரணியை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும், பிரதமருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் திட்டமிட்டபடி குறித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும் வெடிகுண்டு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலை ஹமாஸ் போராளிகளே நடத்தியிருப்பர் என்று சந்தேகிக்கப்படுகின்ற போதிலும் உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg