Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உளவாளி வழக்கில் ஆதாரங்களை தரமறுக்கிறது பிரித்தானியா:ரஷ்யா குற்றச்சாட்டு

In ஐரோப்பா
Updated: 11:18 GMT, Mar 13, 2018 | Published: 11:18 GMT, Mar 13, 2018 |
0 Comments
1118
This post was written by : Elakkiya

ரஷ்ய முன்னாள் உளவாளி ஸ்கிர்பால் மீதான விஷத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை மொஸ்கோவிடம் வழங்குவதற்கு பிரித்தானியா மறுப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் செய்கெய் லவ்ரோவ் இவ்விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான 66 வயதுடைய செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது 33 வயதுடைய மகளான யூலியாவும், பிரித்தானியாவின் சோல்ஸ்பரி பல்பொருள் அங்காடியொன்றில் சந்தேகத்திற்கு உரிய வகையில் மயக்கமடைந்த சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், குறித்த இருவரும், ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட நரம்பு மண்டலங்களை பாதிக்கக் கூடிய இரசாயனத்தால் தாக்கப்பட்டே மயக்கமடைந்தனர் எனவும் இதற்கான பொறுப்பை ரஷ்யாவே ஏற்க வேண்டும் என்றும் பிரித்தானிய பிரதமர் தெரசோ மே நாடாளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் போதே செய்கெய் லவ்ரோவ் இதனை குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg