Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைத்து இனங்களிலும் இனவாதம் இருக்கின்றது : மனோ கணேசன்!

In இலங்கை
Updated: 13:26 GMT, Mar 13, 2018 | Published: 11:07 GMT, Mar 13, 2018 |
0 Comments
1341
This post was written by : Ravivarman

இலங்கையிலுள்ள மூன்று இனங்களிலும் இனவாதம் மேலோங்கிக் காணப்படுவதாக அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

சீத்தாவாக்கபுர பிரதேச செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நீண்டகாலமாக நாட்டில் காணப்பட்ட இனவாதம் எனும் வெடிகுண்டை அண்மையில் வன்முறை என்னும் ஒரு சிறிய தீப்பொறி பற்றவைத்து விட்டது. இச்சம்பவத்திற்கு வெறுமனே அரசாங்கத்தினையும் பொலிஸையும் குறை கூறுவதால் எந்தப் பிரயோசனமும் இல்லை.

நாட்டில் அனைத்து இனங்களிலும் இனவாதம் இருக்கின்றது. அனைத்து இனங்களும் தம்மைச் சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும். குறிப்பாக ஒவ்வொரு இனமும் அடுத்த இனத்தினை  சுமுகமான கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டும்.

இதற்குத் தேசிய சகவாழ்வு அமைச்சர் என்ற முறையில் நானும், எனது அமைச்சும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். ஆனால் நாம் ஓரடி முன்னால் வைத்தால் இனவாதிகள் எம்மை இரண்டு அடிகள் பின்னோக்கிச் செல்ல வைக்கின்றனர்’ என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg