Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையர்களுக்கு ஜப்பான் விடுத்துள்ள மகிழ்ச்சி செய்தி!

In இலங்கை
Updated: 11:21 GMT, Mar 13, 2018 | Published: 11:21 GMT, Mar 13, 2018 |
0 Comments
1291
This post was written by : poovannan

இலங்கைக்கு அவசியமான எந்தவொரு சந்தர்ப்பத்திலும், சகல உதவிகளையும் செய்யத் தயாராகவுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் ஜப்பானுக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஜப்பான் பேரரசர் அகிஹிதோவிற்குமிடையில் சந்திப்பொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் இடம்பெற்றது. இதன்போது ஜப்பான் பேரரசர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

டோக்கியோ நகரிலுள்ள இம்பீரியல் மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதியையும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேனவையும் ஜப்பான் பேரரசரும் அவரது பாரியாரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்ட ஜப்பான் சக்கரவர்த்தி, இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்துவரும் பலமான உறவுகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜப்பான் இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த சந்தர்ப்பங்களில், இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை நன்றியுடன் நினைவுகூர்ந்த ஜப்பான் பேரரசர், இலங்கைக்கு தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உதவுவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஜப்பான் நாட்டிற்கு அழைப்பு விடுத்தமைக்காக ஜப்பான் பேரரசருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை அனைத்துவகையிலும் பலப்படுத்துவது தனது எதிர்பார்ப்பாகும் எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg