Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கமல்ஹாசன் கட்சியில் இருந்து தமிழிசைக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்!

In இந்தியா
Updated: 12:30 GMT, Mar 13, 2018 | Published: 11:36 GMT, Mar 13, 2018 |
0 Comments
1132
This post was written by : Kemasiya

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் மய்யம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளதாகத் தெரிவித்து, தனக்கு  மின்னஞ்சல் வந்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துரைத்த தமிழிசை மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது,

“கமல்ஹாசன் கட்சியில் நான் உறுப்பினராக சேர்ந்துள்ளதாக தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ‘வைத்தியர் தமிழிசைக்கு வணக்கம். உறுப்பினராக சேர்ந்தமைக்கு உளமாற நன்றி. நீங்களும், நானும் நாமானோம், நாளை நமதே, இது உங்கள் உறுப்பினர் அடையாளமாகும்’ என்று குறிப்பிட்டு உறுப்பினர் எண்ணாக டி.எண்.இ டி.ஓ.இ எப். 92829 என்று குறிப்பிடப்பட்டு ‘என்றும் மாறாத அன்புடன் கமல்ஹாசன்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இவ்வாறுதான் கட்சி உறுப்பினர்களை அவர்கள் சேர்த்து கொள்கிறார்கள்” என தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளதற்கு அமைய 6 மாத காலத்திற்குள் அமையப்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg