Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதி வழங்க வேண்டும்: திருநாவுக்கரசர்

In இந்தியா
Updated: 12:37 GMT, Mar 13, 2018 | Published: 11:50 GMT, Mar 13, 2018 |
0 Comments
1102
This post was written by : Kemasiya

குரங்கணி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று (திங்கட்கிழமை) இரவு சென்னை திரும்பிய திருநாவுக்கரசர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் மேற்படி தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

“தேனி – குரங்கணி மலை காட்டுத் தீவிபத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பத்துக்கு தமிழக அரசு குறைந்தபட்சமாக ரூ.10 லட்சம் வழங்கவேண்டும். காயமடைந்தவர்களுக்கு முழுமையான சிகிச்சை அளிக்க வேண்டும்.

அத்துடன் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் சிங்கப்பூர் மற்றும் மலேசிய பயணங்களில் கலந்து கொண்டேன். அது வெற்றிகரமாக அமைந்தது. அங்கு அவர் மக்களையும், அரசியல் கட்சி பிரமுகர்களையும் சந்தித்து பேசினார். அவருக்கு அமோகமாக வரவேற்பு கிடைத்தது. மக்கள் செல்வாக்கு இருப்பதும் கண்கூடாக தெரிந்தது.

ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டதாக ராகுல்காந்தி கூறினார். இதன்மூலம் அவர் மனிதாபிமானமிக்க தலைவர் என்பதையும், பண்பாடு மிகுந்த வாரிசு என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டோம் என ராகுல் கூறிய கருத்துக்கு அனைத்து தலைவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஆனால் பாரதிய ஜனதா தலைவர்களான தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் போன்றோர் எதிர்த்து வருகின்றனர்.

ராகுல் காந்தியை பல தலைவர்கள் பாராட்டியது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg