Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஃபேஸ்புக்கை கட்டுப்படுத்த புதிய சட்ட விதிகள் அவசியம்: சம்பிக்க

In இலங்கை
Updated: 11:51 GMT, Mar 13, 2018 | Published: 11:51 GMT, Mar 13, 2018 |
0 Comments
1336
This post was written by : Risha

நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்ட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்ட விதிகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் பாவனையை கட்டுப்படுத்துவது குறித்து கட்சி தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதற்கு பல வழிகள் காணப்படுகின்றன. ஒன்று, ஏற்கனவே நாட்டிலுள்ள சட்டத்தின் கீழ் ஒழுங்கற்ற வகையில் செயற்படுவோருக்கு எதிராக உடனடியாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல்.

இல்லையேல், முக்கியமாக தேர்தல் காலங்களில் தேவைப்படின் மேலதிக சட்டங்களை நடைமுறைப்படுத்தல். இந்த பிரச்சினையானது, இலங்கையில் மாத்திரமன்றி உலகம் பூராகவும் விரிவடைந்துள்ள ஒரு பாரிய பிரச்சினையாகும்.

இவை எல்லாவற்றையும்விட சமூக வலைத்தளங்களில் போலியான மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பிரசாரங்களை வெளியிடுவோருக்கு எதிராக அரசாங்கம் அதிரடியாக செயற்பட்டு பதிலளித்தல் வேண்டும்.

எதிர்காலத்தில் நியாயமான தேர்தலை நடத்த வேண்டுமாயின், நல்லாட்சியை முன்னெடுத்து செல்ல வேண்டுமாயின் இவை குறித்து புதிய சட்ட விதிகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg