Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோட்டத் தொழிலாளியின் ஊழியர் சேமலாப நிதி மாயம்!

In இலங்கை
Updated: 12:35 GMT, Mar 13, 2018 | Published: 12:35 GMT, Mar 13, 2018 |
0 Comments
1094
This post was written by : Ravivarman

தெனியாய, நவகம்மான பிரதேசத்தை சேர்ந்தவர் மருதமுத்து முருகையா என்பவரின் ஊழியர் சேமலாப நிதி அவருக்குத் தெரியாமல் அவரது கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த பிரதேசத்தில் சிறுவயது முதல் தெனியாய விலிகுரூப் தோட்டத்தில் சுமார் 18 வருடங்கள் வேலை செய்திருக்கின்றார்.

தற்போது தெனியாய, நவகம்மான பிரதேசத்தில் வாழ்ந்துவரும் இவர் அண்மையில் மாத்தறை, மொறவக்க தொழில் காரியாலயத்திற்கு சென்று கேட்டபோது அவரது ஊழியர் சேமலாப நிதியை யாரோ எடுத்துவிட்டதாகக் கூறியிருக்கின்றார்கள்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் தனது வயதான காலத்தில் பிள்ளைகளின் தேவைகளைக்கூட நிறைவு செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg